ஒரு தலைமுறையின் முதுகெழும்பை உடைக்கும் பாரிய முட்டுக்கட்டையாக போதைப் பொருள் பாவனையானது இன்று சமூகத்தில் இலையோடியுள்ளது என்பது குறிப்பான விடயமாகும். ஒரு குழந்தை பிறந்து சமூகத்துக்கு வரும் முன்பே இன்று அதனது வாழ்க்கையில் போதைப் பொருள் வலையமைப்பு என்பது பாதித்துள்ளது என்பது யதார்த்தமானது. தலைநகரைச் சூழ உள்ள பகுதிகளை ஆட்கொண்டிருந்த போதைப்பாவனையானது அன்மைக் காலமாக நாடு முழுவதும் பரவி சமூகத்தின் சகல துறைகளிலும் ஊடுருவி தாக்கி சின்னாபின்னப்படுத்தியுள்ளது என்பது கவலைக்குரிய விடயமாகும். நாட்டின் பொறுப்பான துறைகள் முதற் கொண்டு முக்கிய அதிகாரிகளைக் கூட விட்டு வைக்காது இதன் வியாபிப்பானது விரிந்து சென்றுள்ளது. 2022 இல் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு,பொலிஸ் நிலையங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்கள் ஒன்றிணைந்து நாடளாவிய ரீதியில் மேற்கொண்ட சுற்றி வளைப்புகளையடுத்து ஹெரோயின் 1548 கிலோ கைப்பற்றப்பட்டது. இந்த ஹெரோயின் தொகையுடன் 46,258 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர். இந்த புள்ளிவிபரங்களை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவு வெளிய...