ஒரு தலைமுறையின் முதுகெழும்பை உடைக்கும் பாரிய முட்டுக்கட்டையாக போதைப் பொருள் பாவனையானது இன்று சமூகத்தில் இலையோடியுள்ளது என்பது குறிப்பான விடயமாகும்.

ஒரு குழந்தை  பிறந்து சமூகத்துக்கு வரும் முன்பே இன்று அதனது வாழ்க்கையில் போதைப் பொருள் வலையமைப்பு என்பது பாதித்துள்ளது என்பது யதார்த்தமானது.

தலைநகரைச் சூழ உள்ள பகுதிகளை ஆட்கொண்டிருந்த போதைப்பாவனையானது அன்மைக் காலமாக நாடு முழுவதும் பரவி  சமூகத்தின் சகல துறைகளிலும் ஊடுருவி  தாக்கி சின்னாபின்னப்படுத்தியுள்ளது என்பது  கவலைக்குரிய விடயமாகும். 

நாட்டின் பொறுப்பான துறைகள் முதற் கொண்டு முக்கிய அதிகாரிகளைக் கூட விட்டு வைக்காது இதன் வியாபிப்பானது விரிந்து சென்றுள்ளது. 

2022 இல் போதைப்­பொருள் ஒழிப்புப் பிரிவு,பொலிஸ் நிலை­யங்கள் மற்றும் ஏனைய நிறு­வ­னங்கள் ஒன்­றி­ணைந்து நாட­ளா­விய ரீதியில் மேற்­கொண்ட சுற்றி வளைப்­பு­க­ளை­ய­டுத்து ஹெரோயின் 1548 கிலோ கைப்­பற்­றப்­பட்­டது. இந்த ஹெரோயின் தொகை­யுடன் 46,258 சந்­தேக நபர்­களும் கைது செய்­யப்­பட்­டனர். இந்த புள்­ளி­வி­ப­ரங்­களை பொலிஸ் போதைப்­பொருள் ஒழிப்­புப்­பி­ரிவு வெளி­யிட்­டுள்­ளது. இவ்­வாறு கைப்­பற்­றப்­பட்ட ஹெரோயினின் பெறு­மதி 2090 கோடி எனவும் குறிப்­பி­டப்­பட்டுள்ளது. 



இது ஹெரோயின் மாத்திரமே. 

நாட்டின் பொருளாதாரம் மற்றும் சமூக ஒழுங்கு என்பவற்றை இது எவ்வாறு பாதித்துள்ளது என்பது இந்தத் தரவுகளின் மூலம் தெரியவந்துள்ளது. 

போதைப்ப பொருள் பாவனையானது பாடசாலை மாணவர்கள் மத்தியில் எவ்வாறி தாக்கம் செலுத்தியுள்ளது என்றால் 2015ம் ஆண்டு 2000 பேராகக் காணப்பட்ட  போதைப்பொருள் பாவித்து கைது செய்யப் பட்ட மாணவர்கள் எண்ணிக்கையானது 2022 ம் ஆண்டாகும் போது 6000 ஆக மாறியுள்ளது என்பது கவலைக்குரிய விடயமாகும். இதில் அதிகமானவர்கள் 20 வயதுக்குற்பட்டவர்களே. 

ஒரு தலைமுறையையே அழித்து விடும் அளவு இதன் வியாபாகமானது இன்று மாறியுள்ளது என்பதே கொடூரமானது.



இலங்கையில் 'ஐஸ்' விற்றால் இனி மரண தண்டனை - புதிய சட்டம் இலங்கையில் 'ஐஸ்' எனப்படும் 'மெத்தம்பெட்டமைன்' (Methamphetamine) போதைப் பொருள் தொடர்பான குற்றச் செயல்களுக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் சிறை தண்டனை விதிக்கும் வகையிலான சட்டம் புதன்கிழமை (24ஆம் தேதி) தொடக்கம் அமலுக்கு வந்துள்ளது



Comments